உடலை வாங்க மறுத்து மருத்துவமனை வாசலில் போட்டு சென்ற உறவினர்கள்
புதுச்சேரியில், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வந்தவர் இறந்ததால் அவரது உடலை வாசலில் வைத்து விட்டு, மருத்துவமனையை ஊழியர்கள் பூட்டிச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
புதுச்சேரி அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் தனியார் ((சிவா சக்தி))) கிளினிக் இயங்கி வருகிறது. இங்கு, 54 வயதான கூலித்தொழிலாளி ஆறுமுகம் என்பவர் திடீர் மூச்சுத் திணறலுடன் வைத்தியசாலை வந்தார்.
அங்கு மருத்துவர் இல்லாததால், மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தனர்.
மருத்துவர் பரிந்துரைத்த ஊசியை போட்டுள்ளனர். ஊசி போட்டதும், மயங்கி விழுந்த சிறிது நேரத்தில் ஆறுமுகம் இறந்துபோனார்
அதிர்ச்சியடைந்த ஆறுமுகத்தின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் சண்டையில் ஈடுபட்டனர். கிளினிக்கை மூடிய ஊழியர்கள் இறந்தவர் உடலை வாசலிலே போட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர். அதனால், சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாகத் தனியார் கிளினிக் வாசலிலேயே உடல் கிடந்தது.
ஆறுமுகத்தின் உறவினர்கள் ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் மருத்துவர் அவரது மனைவி மற்றும் இரண்டு பெண் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: