உடன் அமுலுக்கு வரும்வகையில் மேலும் பல பகுதிகளில் ஊரடங்கு!
எஹலியகொட பிரதேச செயலகப் பிாிவின் மின்னான, விலேகொட, யக்குதாகொட, அஸ்ககுல-வடக்கு, போபத்த ஆகிய கிராம சேவகர் பிாிவுகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தொிவித்துள்ளார்.
இதேபோல் கொடகவெல பிரதேச செயலகப் பிாிவின் ரக்வான நகரம், ரக்வான- வடக்கு, ரக்வான - தெற்கு, மஸ்ஸிபுல, கொட்டல ஆகிய கிராம சேவகர் பிாிவுகளும் உனடடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தொிவித்துள்ளார்.
மேலும் இரத்தினபுரி மாவட்டத்தில் சில பிரதேசங்கள் இத்தருணத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுவதாக கொவிட் 19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் அறிவித்துள்ளார்.
உடன் அமுலுக்கு வரும்வகையில் மேலும் பல பகுதிகளில் ஊரடங்கு!
Reviewed by Nila
on
16:49:00
Rating:
No comments: