இந்த வருடத்தில் வெளியான சிறந்த படமாக தெரிவான பாவ கதைகள்- இயக்குனரின் நெகிழ்ச்சி பகிர்வு
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களான சுதா கொங்கரா, கௌதம் வாசுதேவ மேனன், வெற்றிமாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து இயக்கிய படம் தான் ‘பாவ கதைகள்’. இது 4 குறும்படங்களின் தொகுப்பாக உருவான அந்த ஆந்தாலஜி படமாகும்.
இந்தப் படம் நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் பலரின் பாராட்டை பெற்றதோடு, இந்த வருடம் OTT தளங்களில் வெளியான திரைப்படங்களில் சிறந்த படமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த நான்கு குறும்படங்களில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘தங்கம்’ என்கின்ற குறும்படம் பல ரசிகர்களின் கவனத்தைப் பெருமளவு ஈர்த்தது. அதிலும் முக்கியமாக காளிதாஸ் ஜெயராமின் நடிப்பு பல தரப்பினரின் பாராட்டுகளைப் பெற்றது. ஏனென்றால், பெண்தன்மை கொண்ட ஆண் வேடத்தில், சத்தார் என்ற கதாபாத்திரத்தில் காளிதாஸ் சிறப்பாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி காளிதாஸ் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ள தகவல்கள் பலரை நெகிழ வைத்துள்ளது.
அதாவது காளிதாஸ், ‘தங்கம்’ படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையில் இருந்து 12 கிலோ எடையை வெறும் 45 நாட்களில் குறைத்தாராம்.
மேலும் காளிதாஸ் அந்தப் பேட்டியில், சத்தார் என்கின்ற கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் தயங்கிய தாகவும், பிறகு துணிந்து நடித்ததாகவும், அதை ரசிகர்கள் ஏற்கவில்லை என்றால் இன்டஸ்ட்ரியை விட்டே வெளியேறி விடலாம் என்று நினைத்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
அதோடு இந்த கதாப்பாத்திரத்திற்கு இவ்வளவு பாராட்டுகள் வரும் என்று காளிதாஸ் எதிர்பார்க்கவே இல்லையாம்.
எனவே, தங்கம் படத்தின் மூலம் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட காளிதாஸ் அளித்துள்ள இந்த பேட்டியில் உள்ள நெகிழ்ச்சியான தகவல்கள், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
No comments: