யாழ் மாநகர முதல்வராகிறார் சட்டத்தரணி மணிவண்ணன்
யாழ்ப்பாணம் மாநகர சபையின் புதிய முதல்வராக சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் வெற்றி பெற்றுள்ளார்.
இன்று (30) மாநகர முதல்வர் தெரிவுக்காக யாழ் மாநகரசபையில் நடைபெற்ற பொது வாக்கெடுப்பில், ஈபிடிபி உறுப்பினர்களின் ஆதரவுடன் மணிவண்ணன் முதல்வரானார்.
வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் முதல்வர் இ.ஆனோல்ட்டுக்கு 20 வாக்குகளும் மணிவண்ணனுக்கு 21 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
நால்வர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. அமர்வில் பங்குகொண்டு வாக்கெடுப்பில் பங்குகொள்ளாதவர்களில் ஒருவர் தமிழரசுக்கட்சி உறுப்பினர்,மூவர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற மணிவண்ணனுக்கு பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
யாழ் மாநகர முதல்வராகிறார் சட்டத்தரணி மணிவண்ணன்
Reviewed by Thilaks
on
10:30:00
Rating:

No comments: