பட்டையை கிளப்பும் ஈஸ்வரன் புதிய போஸ்டர்-பாடல்கள் வெளியாகும் தேதி அறிவிப்பு
சிம்புவை வைத்து படம் பண்ணுபவர்கள் சங்கடத்தில் நெளிந்த நிலைமை மாறிப்போய் சந்தோஷத்தில் குதிக்கும் சூழல் வந்துவிட்டது நம் கோலிவுட்டில். மாநாடு ஷூட்டிங்கில் பிரேக் எடுத்துவிட்டு மனிதர் சபரிமலை சென்றுள்ளார். திரும்பி வந்ததும் மாநாடு ஷூட்டிங், அதன் பின்பு மஃட்டி ரிமேக் “பத்து தல” கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கிறார்.
ஈஸ்வரன் – ஷூட்டிங் ஆரம்பித்த சில நாட்களிலேயே படம் பொங்கல் ரிலீஸ் அதுவும் திரை அரங்கத்தில் என சுசீந்திரன் அறிவித்தார். சிம்புவும் கட கடவென்று தனது வேலைகளை முடித்து கொடுத்துவிட்டார். இப்பொழுது மாஸ்டர் படமும் பொங்கல் ரிலீஸ், எனவே தியேட்டர் எப்படி படங்களை திரையிடுவர் என அனைவரும் ஆர்வமாக எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை ஐந்து மணிக்கு இசை வெளியீடு எப்போ என்ற அறிவிப்பு வெளியாகும் என்பதனை புதிய போஸ்டருடன் படக்குழு வெளியிட்டுள்ளனர்.
பாடல்கள் ஜனவரி 2 ஆம் தேதி வெளியாகிறது.

No comments: