கிறிஸ்மஸ் கொண்டாடிய மாணவனை குத்திக் கொலை செய்த இளைஞர்கள்
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் கல்லூரி விடுதி மாணவர்களிடையே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தி்ன் போது ஏற்பட்ட மோதலில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் கடலியல் கல்லூரியில் வடமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
வியாழக்கிழமை நள்ளிரவு விடுதியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
கிறிஸ்துமஸ் கேக் வெட்டும் போது 3ம் ஆண்டு மாணவர்களுக்கும் 4ம் ஆண்டு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் மாணவர்கள் இருந்ததால் அவர்களில் சிலர், ஒரு மர நாற்காலியின் காலை உடைத்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஆதித்ய சர்மா என்ற மாணவரின் கழுத்தில் குத்தியுள்ளனர்.
கழுத்தில் குத்தியதில் அதிகளவில் ரத்தம் வெளியேறியதால் மாணவர் ஆதித்ய சர்மா அங்கேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த வெள்ளவேடு போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து மாணவர் சர்மா உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த வழக்கில் 18 வடமாநில மாணவர்களைப் பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்து வருகின்றனர்.

No comments: