கோவிலில் திடீர் தீ விபத்து-இரு இளைஞர்கள் பலி
மும்பை மாநிலம் மேற்கு கண்டிவளி சாய்பாபா கோவிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டு அதில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிகாலை 4.15 மணியளவில் குறைந்த மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வருகிறது.தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காலை 4.40 மணிக்கு தீயை அணைத்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்து அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கே இருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. மற்றொருவர் அங்கிருந்து சியோன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுபாஷ் கொடே, யுவராஜ் பவார் ஆகிய இளைஞர்களே இவ்வாறு குறித்த தீ விபத்தில் உயிரிழந்துள்ளனர்.மன்னு குப்தா என்ற 26 வயது இளைஞர் 90-95% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

No comments: