அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்!; அடுத்த மாதம் பணிகள் ஆரம்பம்!
அரச ஊழியர்களுக்கான கடமைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கும் போது நிறுவனத்தின் பிரதானிகளின் தேவைக்கு ஏற்ப ஊழியர்கள் அழைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி நேற்று இதனைத் கூறியுள்ளார்.
ஜனவரி மாதம் முதலாம் திகதி அரச ஊழியர்கள் வருகைத்தந்த பின்னர் கொவிட் நிலைமையை கருத்தி கொண்டு அவசியமான நபர்கள் பணிக்கு அழைக்கப்படுவது போதுமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்கள் பணிக்கு வரும் போது பற்றிக் அல்லது தங்களுக்கு பிடித்த பொருத்தமான ஆடைகளில் வரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொவிட் நிலைமையில் குறைவு ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்தால், அரச ஊழியர்கள் வழமையை போன்றே கடமைக்கு வர வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்படும் என கூறியுள்ளார்.
அந்த அறிக்கைக்கமைய கடமைக்கு வருகைத்தர வேண்டும் என அவர் கூறிப்பிட்டுள்ளார்.

No comments: