மற்றுமொரு இளைஞன் உயிரிழப்பு-அதிர்ச்சியில் தமிழகம்..!

 

தமிழகத்தில் சேலம் அரசு வைத்தியசாலையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 

அந்த இளைஞர் கொரோனா பாதிப்புடன் இருந்த நிலையில், சிறுநீரகம், நுரையீரல் பாதிப்பும் அவரது உயிரிழப்புக்கு காரணம் என தமிழக சுகாதாரத்துறை தகவல் வௌியிட்டுள்ளது. 

இந்த சூழலில் கொரோனா பரவல் காரணமாக பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டுமென தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. 

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,710 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. 

அதிகபட்சமாக கேரளாவில் 1,147 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

மராட்டியத்தில் 424, டெல்லி 294, குஜராத் 223, தமிழ்நாடு 148, கர்நாடாகா 148, மற்றும் மேற்கு வங்காளத்தில் 116 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

கடந்த 26-ஆம் திகதி 1,010 ஆக இருந்த கொரோனா பாதிப்பு அடுத்த 4 நாட்களில் இருமடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post