மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (27) அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றது. அதிவேக வீதியில் பயணித்த கார், முன்னால் பயணித்த லொறியின் பின்புறத்தில் மோதியதில் விபத்து சம்பவித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது மேலும் இருவர் காயமடைந்த நிலையில் குருநாகல் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


