ஒவ்வொரு பத்து லீற்றர் டீசலுக்கும் ரூ.1000 நிவாரணம் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.
அம்பாறையில் நடைபெற்ற ஒரு மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, இந்த நிவாரணம் நேற்று (மே 22) முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தையில் ஒரு லீற்றர் டீசலின் உண்மையான விலை 492 ரூபாயாக இருக்கும் போதிலும், மக்களுக்கு அது 392 ரூபாய்க்கு வழங்கப்பட்டு வருவதாகவும், கடந்த காலங்களில் அதன் விலை இதைவிடவும் பல மடங்கு அதிகமாகக் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கடற்றொழில் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் படகுகளுக்கான புதிய எரிபொருள் மானிய விபரங்களையும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
