மனைவியை தீவைத்து கொளுத்தி பரபரப்பை ஏற்படுத்திய கணவன் - பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம்


 

கொழும்பு - அங்கொடை, மீகவத்தை பகுதியில் தன் மனைவியின் மீது பெட்ரோல் ஊற்றித்தீ வைத்த சம்பவம் தொடர்பாக கணவரான சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் கொழும்பு - அங்கொடை, மீகவத்தை பகுதியில் கடந்த 18 ஆம் திகதி இடம்பெற்ற நிலையில் சந்தேகநபர் நேற்று ( 22) முல்லேரியாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 18ஆம் திகதி மாலை சுமார் 5.30 மணியளவில் முச்சக்கர வண்டியில் வந்த அவர், மனைவியின் தலையில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

இதன் காரணமாக படுகாயமடைந்த அப்பெண், வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரது முகம் மற்றும் மார்பில் ஏற்பட்ட கடுமையான தீக்காயங்கள் காரணமாக அவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இருப்பினும், அவரிடமிருந்து ஏற்கனவே வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post