புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் இரத்தம் தோய்ந்த ஆடை.. பொலிஸாரை கத்தியால் துரத்த வேண்டிய நிலையில் அதிகாரிகள்

 


அனுராதபுரத்தில் சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர் தொடர்பில் விசாரணைகளில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்தேக நபரான தேரர், அந்தச் சிறுமியைத் துன்புறுத்தியுள்ள நிலையில், இரத்தம் தோய்ந்த சிறுமியின் உள்ளாடை புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். 

மேலும், இத்தகைய வலுவான ஆதாரங்கள் இருந்தபோதிலும், பொலிஸார் தேரரை கைது செய்வதைத் தாமதப்படுத்தி, அவரைத் தலைமறைவாக இருக்க அனுமதித்துள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். 

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளில் பொலிஸார் அந்தச் சிறுமியின் காணொளி ஆதாரத்தைக் கூடப் பெறவில்லை என்று கூறிய சட்டத்தரணி, இந்தச் சம்பவம் தொடர்பான முழு விசாரணை செயல்முறையிலும் பொலிஸார் சட்டத்தை மீறியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இந்தக் குற்றத்தைச் செய்ததற்கான தெளிவான ஆதாரங்கள் இருந்தபோதிலும், சந்தேகத்திற்குரிய தேரர் ஏன் கைது செய்யப்படவில்லை என்று மேற்கு மாகாணப் பொறுப்பதிகாரி சிரேஷ்ட டி.ஐ.ஜி-யிடம் விசாரித்ததாகவும், ஆனால் அவரும் சரியான பதில் அளிக்காமல் காலத்தை வீணடித்து வருவதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டியுள்ளார். 

அத்துடன், தேரரும் சிறுமியும் இடையே 84 தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்றிருந்ததாக தரவு பகுப்பாய்வு அறிக்கைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சந்தேகநபரான தேரர் நிதி, மத மற்றும் உத்தியோகபூர்வ அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நீர்த்துப்போகச் செய்ய பொலிஸார் தற்போது செயல்பட்டு வருவதாகவும் சட்டத்தரணி நீதிமன்றில் மேலும் கூறியுள்ளார். 

மேலும், சந்தேகிக்கப்படும் துறவியைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த உடனேயே, முன்னெப்போதும் இல்லாத திடீர் உடல்நலக்குறைவு அவருக்கு எப்படி ஏற்பட்டது என்றும் சட்டத்தரணி நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேரருக்கு எதிராக இவ்வளவு ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், பொலிஸாரோ அரசாங்கமோ அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமை சமூகத்தில் பெரும் கேள்விக்குள்ளாகியுள்ளது. 

குற்றம் சாட்டப்பட்டுள்ள தேரர் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு மிக நெருக்கமானவர் என்பதால் தான் குற்றத்தில் இருந்து இவ்வாறு தப்பிக்க விடப்படுகின்றாரா என சமூக ஆர்வலர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இதற்கிடையில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியுமான இனோகா ரணசிங்கவின் ஆலோசனையின் பேரில், அந்த அதிகார சபையின் சட்ட அமலாக்கப் பணிப்பாளர் நாயகம் சஜீவனி அபேய்கூன், இந்த சந்தேக நபரைக் கைது செய்வதற்காக "தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பொலிஸாரை கத்தியால் துரத்த வேண்டியிருந்தது" என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் குறித்த தேரர் விவகாரத்தில் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுப்பதில் மிக தாமதமும் தயக்கமும் காட்டுகின்றனர் என்பதை மேலும் உறுதிபடுத்துகின்றது எனவும் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றது. 


قد تُعجبك هذه المشاركات

إرسال تعليق

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post