Radio Information
சூரியன் FM வானொலி இலங்கையில் இருந்து பண்பலை வழியாக ஒலிபரப்பாகும் ஒரு தனியார் தமிழ் வானொலி ஆகும். இதுவே இலங்கையில் உருவான முதலாவது 24 மணி நேர ஒலிபரப்புக் கொண்ட தனியார் தமிழ் வானொலி. ஆரம்ப கால கட்டங்களில் பண்பலை 103.2னூடாக ஒலிபரப்பு இடம்பெற்றது. தற்சமயம் பண்பலை 103.4 மற்றும் 103.6 ஆகிய அலைவரிசைகளினூடாக தன்னுடைய ஒலிபரப்பினை மேற்கொள்கின்றது. இலங்கை முழுவதிலும் தன்னுடைய சேவையினை விரிவாக்கம் செய்துள்ளது. ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ்ச் சேவையே சூரியன் வானொலி ஆகும்.