தந்தி தொலைக்காட்சி என்பது தினத்தந்தி நாளிதழுக்கு சொந்தமான 24 மணி நேரச் செய்தி வழங்கும் தொலைக்காட்சி சேவை ஆகும். இந்த அலைவரிசை நவம்பர் 13, 2012 ஆம் ஆண்டு முதல் சென்னையை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.
இந்த அலைவரிசை 'என்டி டிவி இந்து' என்ற பெயரில் மே 16, 2009 அன்று என்டிடிவி (51%) மற்றும் தி இந்து குழுமம் (49%) ஆகிய நிறுவனங்களால் ஆங்கில மொழி செய்தி வழக்குக்கும் அலைவரிசையாக ஆரம்பிக்கப்பட்டது. இது சென்னையில் மட்டும் ஒளிபரப்பானது. என்டிடிவி இந்துவை தினத்தந்தி குழு கைப்பற்றிய பிறகு இந்த அலைவரிசை 'தந்தி தொலைக்காட்சி' என மறுபெயரிட்டது.
ஆரம்பத்தில் இது ஒரு சென்னை நகரத்துக்கே உரிய அலைவரிசையாக இருந்தது. பின்னர் தந்தி தொலைக்காட்சி என மறுபெயரிடப்பட்டு நவம்பர் 13, 2012 தீபாவளி அன்று 24 மணி நேர தமிழ் செய்தி தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டது. இது தற்பொழுது தனது சேவையை இந்தியா முழுவதும் தொடர்கிறது.