சக்தி வாய்ந்த பிரதோஷ வெள்ளியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{25.4.2025

 

வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2025
மேஷம்
aries-mesham
வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்கள் வந்து ஏற்றம் தரும். குடும்ப உறவுகளிடையே மனைவியால் மனக்கசப்பு உருவாகலாம். வாடிக்கையாளர்களின் மனம் அறிந்து நடந்தால் இலாபம் அதிகரிக்கும்.
ரிஷபம்
taurus-rishibum
பெண்களின் நட்பால் சுகம் ஏற்படும். பெரியோர் ஆசியால் மாணவர்களுக்கு கல்வியில் தேர்ச்சி உண்டு. தொழில், வியாபாரத்தில் தொல்லைகள் குறைந்து, எல்லைகள் விரிவடைந்து ஏற்றம் வரும்.
மிதுனம்
gemini-mithunum
வெற்றி மேல் வெற்றி வரும் நாள். அரசு அதிகாரிகள் மூலம் எதிர்பார்த்த அனைத்து வேலைகளும் அனுகூலமான திசைகளிலும் நகரும். மாணவர்கள் கல்வியில் சிறந்து நல்ல தேர்ச்சி அடைவர்.
கன்னி
virgo-kanni
பேச்சால் பெருமாளையும் அசத்திவிட்டீர்கள். அப்படி இருக்கையில் வருமானத்திற்கு கேட்கவேண்டுமா ? வளமான வாழ்வும், வாகன யோகமும் உண்டு. வியாபாரத்தில் கவனத்துடன் செயல்பட்டால் இழப்பைத் தவிர்க்கலாம்.
மகரம்
capricorn-magaram
சந்தோஷமான சூழ்நிலைகள் மனதில் தெம்பு தரும். மனைவியின் உதவிகள் கண்டு மனம் மகிழும். குழந்தைகள் பால் பாசம் பொழிவார்கள். அரசு ஆதரவால் தொழில் வளர்ச்சியில் திருப்தி நிலவும்.
கடகம்
cancer-kadagam
வாழ்க்கையில் நல்ல, புதிய புதிய மாற்றங்கள் ஏற்படலாம். நேர்மையான வழியில் பணம் சம்பாதிக்க முயலுங்கள். கோபத்தைக் குறைத்தால் குடும்பத்தினரிடையே நல்ல ஒற்றுமையை எதிர்பார்க்கலாம்.
சிம்மம்
leo-simmam
எந்த ஒரு விஷயத்திலும் மிகுந்த எச்சரிக்கையுடன் நடக்க வேண்டிய நாள். பிறர் துன்பத்தில் மகிழ்ச்சி காணும் எண்ணத்தை விடுவது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு.
துலாம்
libra-thulam
இன்று, எல்லாம் ஜெயமே. பாதை விட்டு விலகுவர் பகைவர்கள். கேட்காமலே உதவ முன்வருவர் நண்பர்கள். வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் மனதில் எழும். அதற்காக எதிர்பார்த்த கடன்கள் எளிதில் கிடைக்கும்.
மீனம்
pisces-meenam
பொருளாதார நிலை போற்றும் படியாக இருக்கும். வசீகரமான பேச்சால் வருமானம் கூடும். வருமான உயர்வால் வளமும் அதிகரிக்கும். விரும்பிய வாகனத்தில் வெளியூர் செல்வீர்கள்.
தனுசு
sagittarius-thanusu
வேண்டாத அலைச்சல்கள் மூலம் ஓய்வு குறையும். தெய்வமான அம்மாவின் தேக சுகத்தை பேண வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த வரவுகள் இல்லாததால், புதிய முயற்சிகளை விடுவது நல்லது.
விருச்சிகம்
scorpio-viruchagam
ஆரோக்கியத்தைப் பொருத்து குழந்தைகளை நல்ல அக்கறையுடன் கவனிப்பது முக்கியம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. அமைதியும், ஆதரவான பேச்சு எதிர்ப்புக்களை குறைக்கும்.
கும்பம்
aquarius-kumbam
எதிர்பார்த்த தனலாபங்களில் ஏமாற்றமே மிஞ்சும். மனைவியின் உடல் நிலையில் அக்கறை தேவை. புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. வார்த்தைகளை அளந்து பேசுவது நல்லது

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post