இந்தியா மீது சைபர் தாக்குதல் பாகிஸ்தான்.
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட சைபர் தாக்குதல் குழுவான டீம் இன்சேன் பிகே அமைப்பானது இந்திய இராணுவ தாதியர் கல்லூரியின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தை ஹேக் செய்ததாகக் கூறப்படுகிறது.
எங்கள் மதம் பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் மைல்கள் தொலைவில் உள்ளன அது எங்களை பலப்படுத்துகிறது.
இரு தேசக் கோட்பாடு வெறும் யோசனை அல்ல உங்கள் மதம் உங்களைக் காப்பாற்றாது.
ஆனால் அது உங்கள் மரணத்திற்குக் காரணமாக இருக்கும்
நாங்கள் மிகவும் உயர்ந்தவர்கள் மற்றும் சக்திவாய்ந்தவர்கள் என்று வலைத்தளத்தில் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவ தளபாடங்களை குவித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.