10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்பு செய்த 15 வயது சிறுவன்..!

 

இந்தியாவின் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 34 வயதான பெண் ஒருவர் (பெயர் குறிப்பிடப்படவில்லை), இவர் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். 

 தற்போது அவர் இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வருகிறார். முதல் கணவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு 10 வயது ஆகிறது. அவர் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

 

குறித்த பெண்ணின் 2 மகள்களும் அவரின் முதல் கணவரின் அக்கா வீட்டில் தங்கி படித்து வந்தனர்.

 

முதல் கணவரின் அக்காவிற்கு 15 வயதில் ஒருவர் மகன் உள்ளார். இவரும் அதே வீட்டில் வசித்து வந்த சூழலில் குறித்த பெண்ணின் 10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இந்த நிலையில் சிறுமிக்கு 12 ஆம் திகதி திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சிறுமியை அழைத்துச் சென்றனர்.

 

அங்கு வைத்தியர்கள் சிறுமியை பரிசோதனை செய்தபோது சிறுமி தனக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து வைத்தியர்களிடம் தெரிவித்தார். இதுகுறித்து அறிந்த குறித்த பெண் மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சிறுவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post