யாழ் மாவட்ட 2024ம் ஆண்டு இளம் துடுப்பாட்ட அணிக்கான விருதினை காரை யாழ்ற்றன் கல்லூரி தட்டி தூக்கியது..!

யாழ் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தினரது 2024 ஆம் ஆண்டிற்கான வளர்ந்து வரும் இளம் துடுப்பாட்ட அணிக்கான " விருதினை காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி அணி தம் வசப்படுத்தியது.

குறித்த அணியில்  காரைநகர் வேரப்பிட்டி கிராமத்தை சேர்ந்த வீரர்" பிரபாகரன் டனுஷன் " இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த விருது யாழ் காரைநகர் துடுப்பாட்ட அணியிருக்கும் வளர்ந்து வரும் இளம் துடுப்பாட்ட வீரர்களுக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.

குறித்த அணியினருக்கு யாழ் காரைவாழ் மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தகவல்-வேரப்பிட்டி தர்சன்.