திங்கட்கிழமை, 5 மே 2025
மேஷம்
aries-mesham
அன்னையின் உடல் நிலையில் சிறப்பு கவனம் தேவை. செயல்பாடுகளில் வரக்கூடிய தடை, தாமதங்கள் கண்டு துவண்டு விடாமல், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம்.
ரிஷபம்
taurus-rishibum
முயற்சிகள் வெற்றி பெறும். தனலாபம் பெருகும். குழந்தைகள் மீது பாசம் பொழிவார்கள். மனைவியின் ஒத்துழைப்பால் மனம் மகிழும். வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாக அமையும்.
மிதுனம்
gemini-mithunum
குடும்ப உறுப்பினர் இடையே ஒற்றுமை ஓங்க வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். உடற் சோர்வு ஏற்படும்.
கன்னி
virgo-kanni
பெண்களால் இலாபமும் சந்தோஷமும் பெருகும். பிறருக்கு உதவி செய்யும் நல்ல எண்ணம் கொள்வீர்கள். கல்வியில் மிகுந்த அக்கறை கொண்டு படித்து தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.
மகரம்
capricorn-magaram
பணம் சம்பாதிக்கும் திறன் அதிகரிக்கும். வியாபாரிகள் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளரை கவர்வர். வாக்கு வன்மையால் வளம் பெருகும். பயணங்கள் பயன் தரும்.
கடகம்
cancer-kadagam
அரசுப் பணியாளர்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். பாக்கிய விருத்தி ஏற்படும். சாதுர்யமான பேச்சால் அனைவரையும் கவர்ந்திடுவீர்கள். செல்வ நிலை சீராக உயரும்.
சிம்மம்
leo-simmam
பெண்களால் விரயச் செலவுகள் ஏற்படும். வீண் வம்புக்கு செல்லாதிருப்பது நல்லது. மாற்றங்கள் நிகழும். குறிக்கோளின்றி மனம் போன போக்கில் அலைய நேரும்.
துலாம்
libra-thulam
தைரியம் ஓங்கும். ஆர்வமுடன் செயல்பட்டால் காரியங்கள் அனுகூலமாக முடியும். திருப்திகரமான தீர்த்த யாத்திரைகள் மகிழ்வு தரும். இந்திர போகம் உண்டாகும்.
மீனம்
pisces-meenam
குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள். பயணத்தின் போது தடைகள் அல்லது விபத்துக்களைச் சந்திக்க நேரலாம். எச்சரிக்கை தேவை. பொருட்களை கவனமாக பாதுகாக்கவும்.
தனுசு
sagittarius-thanusu
நேர்மையாக நடக்க வேண்டிய நாள். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் எழலாம். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் பணியில் சாதகமான சூழல் உருவாகும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
தெய்வ நம்பிக்கை அதிகமாவதன் காரணமாக புண்ணியக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
கும்பம்
aquarius-kumbam
எல்லா நலன்களும் உண்டாகும். பயண சுகம் ஏற்படும். தனவரவு கூடும். நண்பர்களால் உதவிகள் ஏற்படும். பெயரும், புகழும் உண்டாகும். தனக்கென சொந்த வீடும் ஏற்படும்.