மூட நம்பிக்கையால்-பரிதாபமாக உயிரிழந்த குழந்தை..!

 

ஐடி நிபுணர்களான பியூஷ் மற்றும் வர்ஷா ஜெயின் ஆகியோரின் ஒரே மகளான வியானாவுக்கு, கடந்தாண்டு மூளைக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் நாளுக்கு நாள் அந்த 3 வயது குழந்தையின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது.

மருத்துவ சிகிச்சையில் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் ஜெயின் மத நம்பிக்கையின் மீது அக்குடும்பத்தின் கவனம் திரும்பியது.

 

மார்ச் 21 அன்று, இந்தூரில் உள்ள ஆன்மீகத் தலைவர் ராஜேஷ் முனி மகாராஜை குழந்தையின் குடும்பம் சந்தித்தது. அப்போது இக்குழந்தைக்கு சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கும் 'சாந்தாரா' வழங்கப்பட்டது. இது மரணத்திற்கு வழிவகுக்கும் ஒரு மத துறவு சடங்காகும்.

 

சாந்தாராவினால் தங்களது குழந்தை இறந்து விட்டதாக தாயார் வர்ஷா ஜெயின் தெரிவித்தார். மூன்று வயது குழந்தையின் உடல்நிலை ஏற்கனவே மோசமாக இருந்ததால் விரைவிலேயே அக்குழந்தை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 

இது தொடர்பாக பேசிய அக்குழந்தையின் தந்தை பியூஷ் ஜெயின், "எங்கள் மக்களுக்கு 'சாந்தாரா'வை முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நாங்கள் இங்கு வரவில்லை, ஆனால் குருஜி அவளுடைய நிலைமை மோசமாக இருப்பதாகக் கூறி அதை பரிந்துரைத்தார். குடும்பத்தில் உள்ள அனைவரும் அதை ஏற்றுக்கொண்டனர்" தெரிவித்தார்.

 

இதன்மூலம் மிக குறைந்த வயதில் 'சாந்தாரா' சபதம் எடுத்த நபர் என்று உலக சாதனை புத்தகத்தில் இச்சம்பவம் பதிவு செய்யப்பட்ட பின்னரே வெளி உலகத்திற்கு இது தெரியவந்துள்ளது.

 

வியனாவுக்கு 50 வயது முதியவருக்கு இணையான மதப் புரிதல் இருந்தது என்று ராஜேஷ் முனி மகாராஜ் கூறினார். அவரது வழிகாட்டுதலின் கீழ் 100க்கும் மேற்பட்டோர் 'சாந்தாரா' சபதம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

இதனையடுத்து, நெட்டிசன்கள் மூடநம்பிக்கையால் ஒரு குழந்தையை கொன்றுவிட்டார்கள் என்று அக்குடும்பத்தையும் இந்த ஜெயின் மத சடங்கையும் விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

 

2015 ஆகஸ்டில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் 'சாந்தாரா' சடங்கு இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 306 இன் கீழ் தற்கொலைக்கு சமம் என்று கூறி இதனை சட்டவிரோதமாக அறிவித்து தீர்ப்பளித்தது.

 

இதனையடுத்து, ஜெயின் சமூகத்தினர் நாடு தழுவிய அளவில் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

 

இதனால் உடனடியாக அடுத்த மாதம் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.