நாட்டில் ஒரு மணிக்கு பிறகு ஏற்பட இருக்கும் மாற்றம்-சம்பவம் பலமா இருக்குமாம்..!

 மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (8.5.2025) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக கனமழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் சில பகுதிகளில், மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டில் 1 மணிக்கு பின்னர் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் | Today Weather In Sri Lanka Heavy Rain With Thunder

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டம் மற்றும் கடலோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்காலிகமாக பலத்த காற்று

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவின் நடுப்பிரப்பந் திடல் பகுதியில் வீடொன்றின் மீது மரம் முறிந்து வீழ்ந்ததில் சேதம் ஏற்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

நேற்று (07) மாலை பெய்த கன மழையுடன் கூடிய காற்றினால் குறித்த மரம் வீட்டின் மீது விழுந்ததில் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் வீட்டு உபகரணங்கள் உட்பட பல பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் வீட்டு கூரையுடனான கட்டிடம் பகுதியளவில் உடைந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.