கோபிநாத்திற்கு அருகதை இல்லை.. யாரை கேவலப்படுத்த அந்த நிகழ்ச்சி.. கொந்தளித்த பிரபலம்!

விஜய் டிவியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் நீயா நானா. இதை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இதில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 27ம் தேதி ஒளிபரப்பான நீயா நானா நிகழ்ச்சியில் நகரத்து ஆண்களை திருமணம் செய்ய விரும்பு பெண்கள் மற்றும் கிராமத்து ஆண்களின் அம்மாக்கள் கலந்துகொண்டு உரையாடினார்கள். இதில் சாதி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், இதுகுறித்து BBT Cinema யூடியூப் சேனலில் முகில் பேசி உள்ளார்.

அதில், முதலில் நீயா நானா என்ற தலைப்பே தவறானது, ஒருமை வார்த்தைகளை தலைப்பில் வைத்து கேவலப்படுத்தும் செயலை விஜய் டிவி தொடர்ந்து செய்து வருகிறது. அந்த தலைப்பே தவறானதாக இருக்கும்போது, அதில் பேசுகிறவர்கள் எப்படி சரியானவர்களாக இருப்பார்கள். சாதிய வன்மத்தை உருவாக்கி குழப்பத்தை உருவாக்குகிற, கோமாளி கூத்தர்கள் தான் கோபிநாத் போன்றவர்கள். கோபிநாத் அறந்தாங்கி என்ற ஊரில் தான் பிறந்தார். அங்கு பிறந்த கோபிநாத் அறந்தாங்கியை சுற்றி இருக்கும் சேரிகளின் அவல நிலை பற்றி என்றாவது பேசி இருக்கிறாரா? பச்சலூர், ஆழப்பிறந்தான் போன்ற ஊர்களில் எல்லாம் அதிகமாக ஜாதிய பிரச்சனை இருக்கிறது. இதில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கடையில் சென்று உட்காரக்கூட முடியாது. கோபிநாத் இதை விஜய் டிவியில் எடுத்து சொல்லி, எங்கள் ஊரின் அவலம் என பேசி இருக்கலாமே, அதை ஏன் கோபிநாத் செய்யவில்லை.

கோபிநாத்துக்கு அருகதை இல்லை: தொலைக்காட்சியில் எதைப்போட்டாலும் மக்கள் அதை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் சீரியல் ஓடிக்கொண்டு இருக்கிறது. அதை மக்கள் பார்க்கிறார்கள். இதனால், இதுபோன்ற நிகழ்ச்சியை நடத்துபவர்கள் மக்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். வலி காட்டியாக இருக்கக்கூடாது. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கோபித்நாத், தீண்டாமை பற்றி நீயா நானாவில் நிகழ்ச்சி நடத்தி இருந்தார். இதைப்பற்றி பேச கோபிநாத்திற்கும் அருகதை இல்லை, விஜய் டிவிக்கும் தகுதி இல்லை. ஏன் என்றால், விஜய் டிவி என்றாவது, மலம் கலந்த தண்ணீரை குடித்துவிட்டீர்களே என்று மனம் வருந்தி, அவர்களின் வேதனையை ஒரு பதிவாக வெளியிட்டதா?

விஜய் டிவியை தடை செய்ய வேண்டும்: அன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு அம்மா, அந்த நிகழ்ச்சிக்கு வந்து இருந்த ஒரு பெண்ணை நான் மருமகளாக்கிக் கொள்கிறேன் என்று சொன்னாங்கா, ஆனால், அந்த பெண் நான் சேரி, நான் ஒரு SC என்று சொன்னதும், வீட்டில் கேட்கிறேன் என்று சொன்னது. அந்த பெண்ணின் மனம் எவ்வளவு பாதித்து இருக்கும். அந்த பெண் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறாள், திறமையானவளாக இருக்கிறாள், ஆனால், அந்த பெண்ணின் சாதி எனக்கு பிடிக்கவில்லை என்கிற கர்வத்தை காட்டிய பெருமை கோபிநாத்தையே சேரும். அந்த நிகழ்ச்சி யாரை கேவலப்படுத்துவதற்கு நடத்தப்பட்டது. மனதிற்குள் இருக்கும் சாதியை மனப்பான்மையை வெளிப்படுத்தும் விதமாக சமூக ஊடகத்தில் பேசுகிறீர்கள் என்றால், அவர்களை எதால் அடிப்பது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த பெண் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருப்பாள். அந்த நிகழ்ச்சியை பார்த்த பல்லாயிரக்கனக்கான தலித் மக்கள் எவ்வள வேதனை அடைத்து இருப்பார்கள். இதுதான் நிகழ்ச்சியா? கலாச்சாரத்தை சீரழிக்கும் விஜய் டிவியை முதலில் தடை செய்ய வேண்டும் என்று முகிலன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post