விமானம் விழுந்த விடுதியில் 2 வயது பேத்தியுடன் காணாமல் போன தாய் : கவலையுடன் தேடி அலையும் மகன்!!

 

விமான விபத்து நடைபெற்ற விடுதியில் சமையல் பணியில் ஈடுபட்டிருந்த தனது தாய் மற்றும் 2 வயது மகளை நபர் ஒருவர் தேடி அலைகிறார்.

நேற்று முன்தினம் பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகனி நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. 


விமானமானது மொத்தம் 242 பேரை ஏற்றிச் சென்ற நிலையில், 241 பேர் உயிரிழந்தனர்.

மேலும், மருத்துவ கல்லூரியின் விடுதியின் மீது விமானம் விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் 10 பேரும் உயிரிழந்தனர். விபத்து நடைபெற்றது மதிய நேரம் என்பதால் ஏராளமானோர் விடுதியில் உள்ள மெஸ்ஸில் உணவருந்தி கொண்டிருந்தனர்.


இந்நிலையில் விபத்து ஏற்பட்டபோது மெஸ்சில் சமையல் வேலை செய்யும் பெண்மணி, தனது இரண்டு வயது பேத்தியுடன் இருந்தது தெரியவந்துள்ளது. அவர்கள் உயிரிழந்திருக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.


இதனால் அவர்களை தேடும் பணியில் அவரது மகன் ஈடுபட்டு வருகிறார். விடுதி மெஸ்சில் சமையல் ஊழியராக ஷர்லாபென் தாகூர் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.


இவர் விபத்து நடைபெற்ற அன்று தனது 2 வயது பேத்தியை அழைத்துச் சென்றுள்ளார். இதில், விமான விபத்து நடைபெற்ற இடம் ஷர்லாபென் தாகூர் இருக்கும் இடம் தான்.


இதனால் தனது மகளுடன் தாய் இறந்திருக்கலாம் என மகன் அஞ்சுகிறார். கட்டட இடிபாடுகளை முற்றிலும் அகற்றினால் தான் எத்தனை பேர் உயிரிழந்திருக்க கூடும் என்ற தகவல் தெரியவரும்.

         

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post