மகாராஷ்டிராவின் தரோடி கூர்த்து பகுதியைச் சேர்ந்த சந்திரசேன் ராம்தேகே (38) பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்தார். அவரது மனைவி திஷா (28), கணவனைப் புறக்கணித்து, ஆசிப் என்ற இளைஞருடன் தகாத உறவில் ஈடுபட்டார்.
வேலைக்குச் செல்வதாகக் கூறி ஆசிப்புடன் தனிமையில் இருந்த திஷாவின் உறவு, சந்திரசேனுக்கு தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, திஷாவும் ஆசிப்பும் சேர்ந்து சந்திரசேனை தலையணையால் மூச்சுத் திணறவைத்து கொலை செய்தனர்.
உறவினர்களின் சந்தேகத்தால் காவல் துறை விசாரணை மேற்கொண்டு, பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் கிடுக்குப்பிடி விசாரணையின் மூலம் உண்மையை வெளிக்கொணர்ந்து, திஷாவையும் ஆசிப்பையும் கைது செய்தது.
