வொஷிங்டனிலிருந்து ஜேர்மனிக்கு புறப்பட்ட போயிங் ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே மீண்டும் வொஷிங்டனில் தரையிறக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானம் 5000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இடது பக்கத்தில் திடீரென்று இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாலேயே விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, விமானத்தின் இடது பக்க இயந்திரம் பழுதானதையடுத்து விமானிகள் ‘MAYDAY’ எனக் கூறி அவசர உதவி கோரியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இயந்திரம் பழுதானதையடுத்து எரிபொருள் தீரும்வரை விமானம் வானில் சிறிது நேரம் சுற்றிவிட்டு எரிபொருள் தேவையான அளவுக்கு தீர்ந்த பின்னர் விமானம் மீண்டும் வொஷிங்டனிலேயே தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
