உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
விமர்சனம் செய்பவர்களுக்கு (எங்களின் போராட்டங்கள், வலிகள் தெரியாது]
திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் திறமைகளை வெளிப்படுத்தி வாய்ப்புகளையும் அங்கிகாரத்தையும் பெற்றுக் கொள்ளவும் எங்களைப் போன்றவர்கள் சந்திக்கும் போராட்டங்களும் வலிகளும் அதிகம் மலையக தோட்டப்பகுதியை சேர்ந்த எனக்கு உலகத்தமிழர்கள் பங்குகொள்ளும் Zee தமிழ் சாதாரணமானதல்ல பல தடைகளுக்கு மத்தியில் அங்கே என் இசைத்திறமையை வெளிப்படுத்தி நல்ல பாடகி என்ற அங்கிகாரம் பெற்றுள்ளேன் என்கிறார் குருமூர்த்தி சிநேகா.
அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் பிறந்து வளர்ந்த குருமூர்த்தி சினேகா இன்று சிறந்த பாடகியாக உலகத்தமிழர் உள்ளங்களில் இடம்பிடித்திருக்கிறார்.
இந்தியாவில் தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப மேடையில் பங்கேற்று பல சுற்றுகள் முன்னேறிய சினேக நாடு திரும்பிய பின் உதயசூரியனுக்கு வழங்கிய நேர்க்காணல்
உங்களின் இசை ஆர்வம் பற்றி?
சிறுவயதிலிருந்தே பாடும் ஆர்வம்
இருந்தது. ஹோல்புரூக் தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் ஆறு முதல் உயர் தரம் வரை இசை துறை பாடத்தை கற்றேன். பாடசாலை மட்டங்களில் வலய மட்டங்களில் பல இசை போட்டிகளில் பங்கேற்று ப வெற்றிகளை பெற்றுள்ளேன். என் குடும்பமும் பாடசாலையும் கொடுத்த லேக்குவிப்பால் இன்று இசைத்துறையில் இன்னும் முன்னேற வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
உண்மையில் அதுவொரு மிகப்பெரிய அதிர்ஷ்டம் என்று தான் கூற வேண்டும். காரணம் நான் அக்கரப்பத்தனை பெல்மோரல் தோட்டத்தில் சாதாரண லவன் வாழ்க்கையை வாழ்ந்தவன். எனது மலையகத்தில் எப்படியான வாழ்க்கை முறை என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை பல வாழ்க்கை போராட்டங்களுக்கு மத்தியில்தான் நான் கல்வி கற்றேன். இசை ஆர்வத்தால் பல கோயில் நிகழ்ச்சிகள் உட்பட பல இசை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளேன். நான் பாடும் பழைய வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதுண்டு.
அப்போது தான் யமுனா அக்காவின் அறிமுகம் கிடைத்தது. அவர்தான் இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்தார். நானும் சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்று பாடல் பாடி உலக அரங்கில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளேன்.
அந்த பிரம்மாண்ட மேடையில்
பாடிய அனுபவம் எப்படியிருந்தது?
நான் என்னதான் இசை கல்வியை கற்றிருந்தாலும் அந்த மேடையில் பாடும் போது பதற்றம் கவலை காணப்பட்டது. கோடி கணக்கான திறமையானவர்கள் இருக்கும் போது மலையகத்திலிருந்து சென்ற எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
எனவே நான் பாடவேண்டும் என எதை பற்றியும் யோசிக்காமல் துணிச்சலுடன் பாடினேன் அப்போது அந்த அரங்கத்தில் எனக்கு கிடைத்த வரவேற்பு எனக்கு உற்சாகத்தையும் ஆர்வத்தையும் கொடுத்தது.
உங்களின் உடை தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அது தொடர்பில் நீங்கள் கூற விரும்புவது என்ன?
இன்று நான் வீடு திருப்பியதற்கு காரணமே அந்த விமர்சனங்கள் தான் என்னுடைய உடை பற்றி பலர் விமர்சனம் செய்தார்கள். நான் ஏன் அந்த உடை அணிந்தேன் என அவர்களுக்கு தெரியாது எனக்கு கொடுத்த முதல் பாடல்' பூக்களையே எனவே அந்த பாடலுக்கு நான் உடையணிய வேண்டும் என்பதால் சாதாரண பாவாடை சட்டை அணிந்தேன்.
ஆனால் ஒரு சிலர் அதை புரிந்து கொள்ளாமல் நான் மலையகத்தை இழிவு படுத்தி விட்டேன். Zee தொலைக்காட்சி மலையகத் தமிழர்களை இழிவுபடுத்தி விட்டது என்றெல்லாம் சமூக வலைதளங்களில் பதிவேற்றி விட்டார்கள் உண்மை நிலையை அறியாத ஒரு சிலருக்கு கூறி கொள்ள விரும்புகின்றேன். அந்த இடத்திற்கு செல்ல நான் எவ்வளவு போராட்டங்களை சந்தித்துள்ளேன் என்பது உங்களுக்கு தெரியாது லைக் கமெண்டுக்காக தேவையில்லாத விடயங்களை கூறி என்னை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி விட்டார்கள் ஒரு சந்தர்ப்பத்தில் பாடமுடியாத நிலை ஆகிவிட்டது. இனி எமது மலையகத்திலிருந் செல்பவர்களுக்கு அவ்வாறு விமர்சனம் பண்ணுபவர்கள் ஊக்கமளிக்காவிட்டாலும் பரவாயில்லை
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser. The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.