ஓய்வு தரும் ஞாயிறு-இன்றைய ராசிபலன்{10.8.2025}

 

ஞாயிற்றுக்கிழமை, 10 ஆகஸ்ட் 2025
மேஷம்
aries-mesham
எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த அரசு உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். கல்வியில் தேர்ச்சி ஏற்படும். பதவி மற்றும் அந்தஸ்து உயர்வு ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
வேலை தேடுபவர்களுக்கு நேர்காணல்களில் வெற்றி கிடைக்கும். கீழே பணிபுரிபவர்களுக்கு கட்டளையிடும் உயர் பதவி கிடைக்கும். அரசு ஆதரவு இருக்கும். கல்வியில் தேர்ச்சி ஏற்படும்.
மிதுனம்
gemini-mithunum
பக்தி மார்க்க ஈடுபாடு, சிந்தனைகள் அதிகரிக்கும். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். கோவில், குளம் போன்ற திருப்பணிகளில் ஈடுபடுவதால், புகழ் ஓங்கும்.
கன்னி
virgo-kanni
எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த தனவரவுகள் வந்து ஏற்றம் தரும். உதவிக்கரம் நீட்டுவர் உற்ற தோழர்கள். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும்.
மகரம்
capricorn-magaram
குடும்பத்தில் நிம்மதி குறையும். எதிர் நீச்சல் போட வேண்டிய நாள். புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. மாணவர்கள் மிகுந்த அக்கறையுடன் படித்தல் அவசியம்.
கடகம்
cancer-kadagam
எதிலும் எச்சரிக்கையாக இருக்கவும். நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொள்வது நல்லது. உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் பதவி உயர்வு உண்டு.
சிம்மம்
leo-simmam
புதியன கற்பதில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய வாகனங்கள் வாங்க திட்டமிடுவீர்கள். சுவையான உணவுகளை ருசித்து மகிழ்வீர்கள். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக நடக்கும்.
துலாம்
libra-thulam
குழந்தைகள் உடல் நிலையில் அக்கறை தேவை. அனைவருடனும் சுமுகமாகப் பழகி, அமைதியாக நடந்தால் எதிர்ப்புகள் குறையும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் ஏளனமே மிஞ்சும்.
மீனம்
pisces-meenam
அரசுப் பணியாளர்கள் இடமாற்றங்களை எதிர் பார்க்கலாம். பணிச்சுமையும் அதிகரிக்கும். தேவையற்ற வாக்குவாதங்களால் உறவுகளிடையே மனக்கசப்பு உருவாகலாம்.
தனுசு
sagittarius-thanusu
மனத்தெம்பும் மகிழ்ச்சியும் ஏற்படும். அனைத்து காரியங்களிலும் கை கொடுப்பாள் மனைவி. குழந்தைகள் பால் பாசம் பொழிவார்கள். தடைப்பட்டு வந்த தொழில் வளர்ச்சி நிலையை அடையும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
தனவரவுகள் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது. தாயின் ஆரோக்கியம் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தேவையற்ற குழப்பம் காரணமாக படுத்தவுடன் தூக்கம் வராது.
கும்பம்
aquarius-kumbam
இனிய பயணங்களால் இன்பம் பெருகும். அனைத்து விஷயங்களிலும் மனத்திருப்தி ஏற்படும். புத்தி சாதுர்யமும், வாக்கு வன்மையும் ஓங்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் நிலவும்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post