எரிந்த நிலையில் 8 ம் வகுப்பு மாணவன் சடலமாக மீட்பு..!

 

கர்நாடக மாநிலம், பெங்களூரில் ஹுலிமாவு பகுதியை சேர்ந்த நிஷித் (13 வயது) என்ற சிறுவன் கிறிஸ்ட் பள்ளியில் 8 ஆம் வகுப்பு பயின்று வந்த நிலையில் எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளான்.

இந்நிலையில் நேற்று முன்தினம் (30) மாலை, நிஷித் தனது டியூஷன் வகுப்பில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டான்.

இரவு 8 மணி தாண்டியும் நிஷித் வீடு திரும்பாததால், தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராயான நிஷித்தின் தந்தை ஹுலிமாவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணையில், சிறுவனின் சைக்கிள் அரகேர் பகுதியில் உள்ள புரோமிலி பூங்கா அருகே கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுவன் காணாமல்போன சில மணி நேரங்களுக்குப் பிறகு, நிஷித்தின் குடும்பத்திடம் 5 இலட்சம் ரூபாய் கேட்டு மிரட்டி போன் அழைப்பு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று (31) மாலை, கக்கலிபுரா சாலைக்கு அருகிலுள்ள ஒரு வெறிச்சோடிய பகுதியில் நிஷித்தின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவனின் உடல் பாதி எரிந்த நிலையில், காலணிகள் மற்றும் உடைகள் கருகிய நிலையில் கிடந்துள்ளது.

இந்நிலையில் சிறுவனைக் கடத்தி கொலை செய்த குற்றசாட்டில் குருமூர்த்தி மற்றும் கோபாலகிருஷ்ணா என்ற இருவரை பொலிஸார் நேற்று (31) இரவு பன்னர்கட்டா காவல் நிலைய எல்லைக்குள் வைத்து மடக்கினர். இருவரும் கைது செய்யும்போது, பொலிஸாரை கொடிய ஆயுதங்களால் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் தாக்குதலைத் தொடர்ந்ததால், பொலிஸார் தற்காப்புக்காக ஆறு முறை சுட்டனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காயமடைந்த குருமூர்த்தி மற்றும் கோபாலகிருஷ்ணா இருவரும் ஆரம்ப சிகிச்சைகளுக்காக ஜெயநகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post