தேனிலவில் கணவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் ; முன்னாள் காதலனுடன் அரங்கேற்றப்பட்ட கொடூரம்

 

ராஜஸ்தானில் திருமணமான மூன்று மாதங்களில் மனைவியே கணவனை திட்டமிட்டு கொலை சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரைச் சேர்ந்த ஒருவருக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் தேனிலவுக்காக இருவரும் வெளியில் சென்றுள்ளனர்.அதன்போது அவ்வழியாக வந்த கார் திடீரென தம்பதி மீது மோதி விபத்துக்குள்ளானதாகவும் அதில் கணவன் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பில் மனைவியிடம் விசாரணை மேற்கொண்டதில், அடையாளம் தெரியாத வாகனம் தங்கள் மீது மோதியதாகவும், மயக்க நிலையில் கிடந்த தன்னிடம் இருந்து நகைகள் மற்றும் செல்போன் கொள்ளை அடிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, சம்பவ இடத்தில் தடய அறிவியல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர். விபத்து நிகழ்ந்தது குறித்து மனைவி கூறியதில் முரண்பாடு இருந்ததுடன், அவருக்கு எந்தவொரு காயமும் ஏற்படாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.மேலும், தடய அறிவியல் சோதனையில் கணவர் மீது காரை ஏற்றியதுடன், அவரை அடித்து கழுத்தை நெரித்துக் கொன்றது அம்பலமானது. குறிப்பாக, அவரது கழுத்தில், அஞ்சு மற்றும் சிலரின் கைரேகை பதிவுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, இளம்பெண்ணின் செல்போன் உரையாடல்களை பொலிஸார் ஆய்வு செய்தனர்.

அதில், அவரது பக்கத்து வீட்டில் வசித்துவந்த இளைஞருடன் அடிக்கடி பேசி வந்தது தெரியவந்தது. திருமணத்துக்கு முன்பு அவரை குறித்த பெண்அவரை காதலித்து வந்துள்ளார். ஆஷிஷ் உடன் திருமணம் முடிந்ததும், கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் அடிக்கடி சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

அப்போது, முன்னாள் காதலனை சந்தித்து, தனது கணவனை தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, சம்பவத்தன்று தனது கணவரை ஆள் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.அதன் போது அங்கிருந்த முன்னாள் காதலன் உள்ளிட்ட குழுவினர் கணவர் மீது காரை மோதவிட்டு, அடித்துக் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. பின்னர், விபத்து நாடகம் ஆடிய மனைவி, நகைகளை கூட்டாளிகளிடம் தானே கழற்றிக் கொடுத்துவிட்டு கொள்ளை நாடகத்தையும் அரங்கேற்றியுள்ளார்.

இதையடுத்து, இளம்பெண், அவரது காதலன் உட்பட 4 பேரையும் கைது செய்து பொலிஸார்தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post