மற்றுமொரு நாட்டில் சக்திவாய்ந்த நில அதிர்வு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை


அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் இன்று காலை 11 மணியளவில் சக்தி வாய்ந்த நிலஅதிர்வொன்று பதிவாகியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 மெக்னிடுயிட்டாக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுபற்றி அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், நிகோல்ஸ்கி நகரில் இருந்து தென்மேற்கே 93 கிலோமீற்றர் தொலைவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டது. 19.9 கி.மீ கடல் ஆழத்தில் இந்த நில அதிர்வானது உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சுனாமி எச்சரிக்கை எதனையும் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் பிறப்பிக்கவில்லை. இதனால், பொருளிழப்புகளோ, கட்டிட இடிபாடுகளோ அல்லது யாருக்கும் பெரிய பாதிப்புகளோ ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றது. எனினும், இதன்பின்னர் நிகோல்ஸ்கி நகரில் இருந்து 85 கி.மீ. தென்மேற்கே மற்றொரு நில அதிர்வும் ஏற்பட்டது. 


அது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானது. இதேபோன்று தெற்கு கலிபோர்னியா கடலோரம் பசுபிக் பெருங்கடலில் 3.5 அளவிலான மற்றொரு நிலஅதிர்வும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Related Post
Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post