துப்பாக்கிச் சூட்டின் போது தாம் "கவலைப்படவில்லை" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஜனாதிபதியும் மற்ற மூத்த அரசாங்கப் பிரமுகர்களும் குறிவைக்கப்பட்டதாக அதிகாரிகள் நம்புகின்றனர். நான் கவலைப்படவில்லை. எனக்கு வாழ்க்கை புரிகிறது. நாம் ஒரு குழப்பமான உலகில் வாழ்கிறோம்," என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.நிகழ்ச்சியின் போது நிலைமை திடீரென மாறத் தொடங்கியதை தாமும் முதல் மகளிர் மெலனியா ட்ரம்பும் உணர்ந்ததாக ட்ரம்ப் கூறினார். சூழல் மெதுவாக பதற்றமாக மாறியதாகவும் அவர் விளக்கினார்.
சந்தேக நபர் ஹோட்டல் வழித்தடத்தில் வேகமாக நகர்ந்தாலும், சட்ட அமலாக்க அதிகாரிகள் அதே வேகத்தில் செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். துப்பாக்கிச் சத்தம் எழுந்தபோது, மெலானியா டிரம்ப் மிகவும் தைரியமாக நிலைமையை சமாளித்ததாகவும் அவர் பாராட்டியுள்ளார்.அதேவேளை, “என்ன நடக்கிறது என்பதை பார்க்க விரும்பினேன்” என்பதால், United States Secret Service அதிகாரிகளின் பதில் நடவடிக்கை தாமதமாகியிருக்கலாம் என்றும் ட்ரம்ப் ஒப்புக்கொண்டார்.
வாஷிங்டனில் உள்ள Washington Hilton ஹோட்டலில் துப்பாக்கிச் சத்தம் கேட்டபோதும், யாருக்கும் காயம் ஏற்படாது என்ற நம்பிக்கை இருந்ததால் தாம் கவலைப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்காவில் அரசியல் வன்முறை தற்போது முந்தைய காலத்தை விட அதிகமாக இல்லை என்றாலும், டெமோக்ராட்டிக் கட்சியின் பேச்சு சூழலை ஆபத்தானதாக்குகிறது எனவும் அவர் குற்றம் சாட்டினார்.
இடைநிறுத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியை 30 நாட்களுக்குள் மீண்டும் நடத்த வேண்டும் என்றும், அதற்கு அதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் ட்ரம்ப் வலியுறுத்தினார்.இந்த சம்பவம் ஊடகங்களுடனான தன் உறவை மாற்றுமா என்ற கேள்விக்கு, ஊடகங்கள் டெமோக்ராட்டிக் கட்சியுடன் நெருக்கமாக செயல்படுகின்றன என்று அவர் விமர்சித்தார்.
மேலும், Norah O’Donnell சந்தேக நபரின் எழுத்துக்களை வாசித்தபோது, ட்ரம்ப் கடுமையாக எதிர்வினையாற்றி, “60 Minutes” நிருபரை “அவமானம்” என விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் அமெரிக்க அரசியல் சூழல், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஊடகங்களின் பங்கு குறித்து புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.
