ஜன நாயகன் படக்குழு அதிர்ச்சி; இணையத்தில் முழு படமும் வெளியீடு!

 


ஜன நாயகன் திரைப்படத்தின் முதல் 5 நிமிட காட்சிகள் மற்றும் இறுதி காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது 3 மணி நேர முழு படமும் வெளியானதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.

ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ள படம் ‘ஜன நாயகன்’. இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 09 ஆம் திகதி வெளியாகவிருந்த ஜன நாயகன் திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினை மற்றும் தேர்தல் காரணமாக வெளியாவதில் சிக்கல்கள் நிலவியது.

பொங்கலுக்கு வெளியாகவிருந்த ஜன நாயகன் படம், விஜய் இன் அரசியல் பிரவேசத்தால் வெளியாவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதால், படக்குழுவினர் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர்.இந்நிலையில் ஜன நாயகன் படம் சட்டவிரோதமாக இணையத்தில் முழு படமும் வெளியான நிலையில், இதனை யார் வெளியிட்டிருப்பார்கள் என்பது குறித்து முறைப்பாடு அளிக்கப்படுவதுடன் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post