சனி செவ்வாய் சேர்க்கை ; இந்த இராசிகளுக்கு அதிரடி முன்னேற்றம்

 2026 ஆம் ஆண்டு சனி செவ்வாய் சேர்க்கை ஒரு சில ராசிகளுக்கு வாழ்க்கையில் அவர்களுடைய பிடிவாத குணத்தை குறைத்து விடாமுயற்சியுடன் போராடி மிகப்பெரிய அளவில் வெற்றியை தேடி கொடுக்கபோகிறது.

அதாவது சனிபகவான் நிதானத்தையும் செவ்வாய் பகவான் வேகத்தையும் கொடுத்து இவர்களுக்கு பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் உயர்த்த போகிறது. அப்படியாக, சனி செவ்வாய் சேர்க்கையால் எந்த ராசிகள் மிகப்பெரிய அளவில் நன்மையை பெறப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சனி செவ்வாய் சேர்க்கையானது இவர்களுக்கு மனதில் இருக்கக்கூடிய குழப்பத்தை நீக்கி எதையும் நிதானமாக பதட்டம் இல்லாமல் செய்து காரியங்களில் வெற்றியை தேடி கொடுக்கப் போகிறது. நீண்ட நாட்களாக தொழில் தொடங்க வேண்டும் என்று ஆலோசனை செய்து கொண்டிருந்தவர்களுக்கு அதை செய்யக்கூடிய வலிமையும் பொருளாதார உயரத்தையும்கொடுக்கப் போகிறது.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி செவ்வாய் சேர்க்கையானது இவர்களுக்கு குடும்பத்தில் ஒரு முக்கிய முடிவுகளை எடுத்து அதில் அவர்களுக்கு வெற்றியை தேடி கொடுக்க போகிறது. எதையும் நிதானமாக யோசித்து செயல்படுவீர்கள். குடும்பத்தினர் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை கொடுப்பார்கள். நீண்ட நாட்கள் பொருளாதாரத்தில் சந்தித்து வந்த சிக்கல்கள் விலகும். 

துலாம்: துலாம் ராசிக்காரர்களுக்கு சனி செவ்வாய் சேர்க்கையானது அலுவலகத்தில் மிகப்பெரிய அளவில் பெயரை பெற்று கொடுக்கப் போகிறது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் நீண்ட நாட்கள் சந்தித்து வந்த பிரச்சனைகளிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். அரசியல் தொடர்பான விஷயங்களில் நீங்கள் தெளிவாக முடிவெடுத்து உயர்ந்த நிலைக்கு செல்லக்கூடிய யோகம் உண்டாகும்.      

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post