எதிர்வரும் வெசாக் பூரணைத் தினத்தை முன்னிட்டு மே 30 மற்றும் 31 ஆகிய திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.ஜே.ஜி.எஸ். பேமரத்ன அறிவித்துள்ளார்.
அதன்படி, 2026.05.29 அன்று மதுபானசாலைகள் மூடப்படும் நேரத்திலிருந்து, 2026.06.01 அன்று மீண்டும் திறக்கப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ள நேரம் வரை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
.jpeg)