தொடர் பாலியல் தொல்லையால் வெடித்த ஆத்திரம்? கொலை வழக்கின் பரபரப்பு

 

மிசோரம் அழகிய மலைப்பகுதியான ஐஸ்வால் நகரின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்க்கை எப்போதும் போல அமைதியாக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக அந்தக் குடியிருப்பின் வாசிகளுக்கு ஒரு விஷயம் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது.

ஒரு குறிப்பிட்ட வீட்டிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசத் தொடங்கியிருந்தது. முதலில் சிறிய அளவில் இருந்த அந்த வாசனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது.

வீடு தொடர்ந்து பூட்டப்பட்டிருப்பதை கவனித்த அவர்கள், உள்ளே ஏதோ தவறு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அஞ்சத் தொடங்கினர். “உள்ளே யாரேனும் உயிர் இழந்திருக்கலாமோ?” என்ற பயம் அவர்களின் மனதில் பரவியது. இறுதியில், தாங்க முடியாத அளவுக்கு துர்நாற்றம் அதிகரித்ததால், குடியிருப்பு வாசிகள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

புரிந்து வந்த காவல்துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தபோது, அவர்களுக்காக பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. சுமார் 45 வயது மதிக்கத்தக்க வான்லால்சுங்கா என்ற நபரின் உடல் அழுகிய நிலையில் கிடந்தது.

அவரது உடலில் ஏற்பட்டிருந்த மாற்றங்கள் காவலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தின. உடனடியாக தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அந்த வீட்டில் குடியிருந்த லால்மிங்லியானி என்ற பெண்ணைத் தேடத் தொடங்கினர்.

காவல்துறையினர் லால்மிங்லியானியை தொடர்பு கொண்டபோது, அவர் “நான் கோவிலுக்கு சென்று ஒரு வாரமாக வீட்டில் இல்லை” என்று தெரிவித்தார். இந்த பதில் காவலர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.

விசாரணை தீவிரமடைந்தது. வான்லால்சுங்காவின் செல்போன் அழைப்பு பதிவுகளை ஆராய்ந்தபோது, அவருக்கும் லால்மிங்லியானிக்கும் நீண்டகால தொடர்பு இருப்பது தெரியவந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் அடிக்கடி தொலைபேசியில் பேசியிருந்தனர். இதனால் காவல்துறை ஒரு தனிப்படையை அமைத்து, அந்த வீட்டின் உரிமையாளரை கண்டுபிடிக்க முயற்சி செய்தது.

விசாரணையின் மூலம் லால்மிங்லியானி காசியில் (வரணாசியில்) கண்டுபிடிக்கப்பட்டார். ஆனால் அப்போது அவரது தலை மொட்டையாக இருந்தது. அவரை அழைத்து வந்து விசாரித்தபோது, “எங்களுக்கு தகாத உறவு இருந்தது. அவர் என்னிடம் பணம் கேட்டு மிரட்டினார். கோபத்தில் நானே அவரை இப்படி செய்தேன்” என்று கூறினார்.

ஆனால் காவல்துறையினருக்கு அவரது பதில்கள் உண்மையாகத் தோன்றவில்லை. பல விஷயங்கள் ஒன்றுக்கொன்று பொருந்தவில்லை. அவர்கள் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினர்: “அந்த நபரின் மர்ம உறுப்பு எங்கே போனது?”

முதலில் லால்மிங்லியானி “நான் அதை வெட்டி நாய்க்கு போட்டு வெளியே வீசிவிட்டேன்” என்று கூறினார். ஆனால் அடுத்தடுத்த விசாரணையில் அவரது பதில்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தன. இந்த ரகசியம் தீர்க்கப்படாத கேள்வியாகவே இருந்தது.

காவல்துறையினர் வீட்டை மீண்டும் தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது ஒரு நீல நிற லஞ்ச் பாக்ஸில் எறும்புகள் ஏறிக் கொண்டிருப்பதையும், அதிலிருந்து கடுமையான துர்நாற்றம் வருவதையும் கண்டுபிடித்தனர். பாக்ஸைத் திறந்து பார்த்தபோது அதிர்ச்சி மேலும் அதிகரித்தது. உள்ளே அந்த நபரின் மர்ம உறுப்பு அழுகிய நிலையில் இருந்தது.

இந்தக் காட்சி காவலர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. “ஏன் இப்படி ஒரு பொய்யை சொன்னார்?” என்று தீவிர விசாரணை தொடங்கியது. அப்போதுதான் உண்மையான ரகசியம் வெளியானது. லால்மிங்லியானிக்கு 17 வயதில் கல்லூரியில் படிக்கும் மகள் லால்ரெம்ரூவாட்டி இருந்தார். அவர்தான் இந்த சம்பவத்தின் மையம்.

லால்ரெம்ரூவாட்டியின் தந்தை இறந்த பிறகு, அவரது தாய் வான்லால்சுங்காவுடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் அவரை வீட்டுக்கு அழைத்து வந்து, “இனிமேல் இவர்தான் உனது தந்தை” என்று அறிமுகப்படுத்தினார். ஆனால் 17 வயது இளம் பெண்ணான லால்ரெம்ரூவாட்டிக்கு இது ஏற்றுக்கொள்ள முடியாத கொடூரமாக இருந்தது.

“என்னால் வேறு யாரையும் தந்தையாக ஏற்றுக்கொள்ள முடியாது. நீ வேண்டுமானால் அவரை கணவர் என்று அழைத்துக் கொள்” என்றுசொல்லிவிட்டு, கல்லூரி ஹாஸ்டலில் தங்கி படிக்கச் சென்றுவிட்டார்.

ஆனால், விடுமுறை நாட்களில் ஹாஸ்டலில் உணவு தயாரிக்கப்படாததால், அவர் அவ்வப்போது வீட்டுக்கு வருவது வழக்கம். அந்த நேரங்களில் வான்லால்சுங்கா அவரிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்திருக்கிறார்.

கழிவறையில் இருக்கும் போது கதவைத் தட்டி திறக்கச் சொல்வது, வீட்டில் வேலை செய்யும் போது பின்பக்கம் தொந்தரவு செய்வது, ஹாலில் ஆடை இன்றி நடமாடுவது, போதையில் மர்ம உறுப்பை காட்டி ஆட்டம் போடுவது போன்ற செயல்கள் தொடர்ந்தன. இது இளம் பெண்ணின் மனதில் ஆழமான வலியையும் கோபத்தையும் உருவாக்கியது.

சம்பவத்தன்று, வான்லால்சுங்கா லால்மிங்லியானியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு, ஆடை இன்றி வெளியே வந்து, லால்ரெம்ரூவாட்டியை நெருங்கி “இப்போது உன்னுடன் நான் உல்லாசமாக இருக்கப் போகிறேன்” என்று கூறியிருக்கிறார். அந்த நேரத்தில் கையில் கத்தியுடன் ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருந்த லால்ரெம்ரூவாட்டி, கோபத்தில் அந்த கத்தியால் அவரைத் தாக்கி, அவரது மர்ம உறுப்பை அறுத்தெடுத்தார்.

அதை எடுத்துச் சென்று தாயிடம் கொடுத்து, “இதற்குத்தானே நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய். இதை பத்திரமாக வைத்துக் கொள்” என்று கூறியதாக தெரிகிறது. அதிக ரத்தப்போக்கால் வான்லால்சுங்கா அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துப் போன தாய், உடனடியாக மகளை நீ ஹாஸ்டலுக்கு போயிடு என கூறி வீட்டை பூட்டிவிட்டு காசிக்கு சென்று தலையை மொட்டை அடித்துக் கொண்டு தலைமறைவாக முயற்சி செய்தார்.

ஆனால், மகள் பாதிக்கப்படுவாளோ என்ற அச்சத்தில் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்யாமல் இருந்ததால், காவல்துறைக்கு துப்பு கிடைத்தது. இறுதியில் தாயும் மகளும் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த சம்பவம் மிசோரம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

பாலியல் தொல்லை, பாலியல் வன்முறை அல்லது அச்சுறுத்தல் போன்ற எந்தச் செயலையும் ஒருபோதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் நம்பகமான குடும்பத்தினர், ஆசிரியர்கள் அல்லது காவல்துறையிடம் உடனடியாக புகார் அளித்து சட்டப்பூர்வ பாதுகாப்பை நாட வேண்டும். அதே நேரத்தில், குற்றச்சாட்டுகள் மற்றும் சம்பவ விவரங்கள் நீதிமன்ற விசாரணை மற்றும் காவல்துறை விசாரணையின் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டியவை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.