இன்ஸ்டாகிராம் நட்பு காதலாக மாறியது: நடத்தையில் சந்தேகம்; இளம் பெண்ணுக்கு நடந்த கொடுமை

 

ஈரோட்டில் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான இளம்பெண்ணின் நடத்தையில் சந்தேகப்பட்டு நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த அவரை எரித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு பாரதி நகர் 3வது வீதியை சேர்ந்த சென்னப்பன் மகள் வினோதினி (24). இவரது கணவர் சூர்யா (28). தம்பதியினருக்கு தனிஷ் (4) என்ற மகன் உள்ளார். சூர்யா திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் டெய்லராக வேலை பார்த்து வந்ததால், அங்கேயே குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.

வினோதினி அதிக நேரம் செல்போனை பார்த்து வந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. குறிப்பாக, சூர்யா வேலைக்கு சென்றதும் வினோதினி இன்ஸ்டாகிராம் மூலம் பல பேருடன் பேசி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், வினோதினிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி சாயல்குடி அரண்மனை தெருவை சேர்ந்த நவநீதிகிருஷ்ணன்(26), என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நவநீதகிருஷ்ணன் சிம்கார்டு விற்பனை செய்து வந்தார்.

இவர்கள் அடிக்கடி இன்ஸ்டாகிராம் மூலம் பேசி வந்த நிலையில் இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதற்கிடையில், வினோதினிக்கும், சூர்யாவுக்கும் மீண்டும் குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால், வினோதினி கணவரை விட்டு பிரிந்து மகனுடன் ஈரோட்டில் உள்ள பெற்றோர் வீட்டின் அருகில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அதன்பின் வினோதினி, ஈரோட்டில் உள்ள ஆர்கானிக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். தொடர்ந்து, இன்ஸ்டாவில் வினோதினியும் நவநீதகிருஷ்ணனும் பேசி பழகி வந்தனர்.

சமூக வலைதளங்கள் புதிய நட்புகளை உருவாக்கும் வாய்ப்புகளை வழங்கினாலும், தெரியாத நபர்களுடன் தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வது மற்றும் நெருக்கமான உறவுகளை உருவாக்குவது ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும். குடும்பப் பிரச்சினைகள் அல்லது உறவுச் சிக்கல்கள் ஏற்பட்டால், வன்முறையைத் தவிர்த்து உரையாடல், குடும்ப ஆலோசனை அல்லது சட்டப்பூர்வமான வழிகளை நாடுவது பாதுகாப்பான அணுகுமுறையாகும்.