அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், அதிக திறன் கொண்ட வெளிநாட்டு பணியாளர்களுக்கான புதிய எச்-1பி விசாக்களுக்கு 103,265 அமெரிக்க டொலர் கட்டணம் விதிக்கும் முன்மொழியப்பட்ட விதிமுறையை வெளியிட்டுள்ளது.
இந்தக் கட்டணம் கடந்த ஆண்டு ட்ரம்ப் நிர்வாகத்தால் தற்காலிக உத்தரவின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், அதை அறவிட அமெரிக்க நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன.
தொழில்நுட்பம், கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் பெரிதும் பயன்படுத்தப்படும் H-1B விசாக்களின் செலவை இந்தக் கட்டணம் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து 30 நாள்களுக்கு கருத்து பெறப்படும் என அமெரிக்க தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
இந்த விதிமுறை இந்த ஆண்டின் இறுதிக்குள் இறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
