16 வயதிற்குட்பட்டோருக்கு தடை: அரசாங்கம் எடுத்த அதிரடி தீர்மானம்

 

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான புதிய சட்டமூலம் ஒன்றை நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக அந்தநாட்டின் பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் அறிவித்துள்ளார்.

இந்த சட்ட விதிமுறைகளை பின்பற்றத் தவறும் சமூக ஊடக நிறுவனங்களின் சர்வதேச வருவாயில் 10 வீதம் வரை அபராதமாக விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டமூலத்தின்படி, சமூக ஊடகத் தளங்கள், ஏற்கனவே உள்ள கணக்குத் தகவல்கள், முகத் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் அடையாள ஆவணங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, பயனர்களின் வயதைச் சரிபார்க்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எனினும், இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறத் தேவையான ஆதரவைப் பெறுமா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

ஏனெனில், லக்சனின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான ‘நியூசிலாந்து ஃபர்ஸ்ட்’   கட்சி இதற்கு ஆதரவளிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதத்தில், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்த உலகின் முதல் நாடாக அவுஸ்திரேலியா மாறியது.

இதன் மூலம் ரிக்ரொக், ஆல்பாபெட்டின், யூடியூப் மற்றும் மெட்டாவின் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் அவர்கள் நுழைவது தடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.