300 குழந்தைகளுக்கு நடந்த கொடுமை: பதறவைக்கும் சம்பவம்

இஸ்ரேல் உடனான போர்நிறுத்தம் அமுலில் இருக்கும் 300 நாள்களில் 300 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என யுனிசெஃப் அமைப்பு அறிவித்துள்ளது.

காஸாவில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனக் கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையே 2025 ஒக்டோபரில் கையெழுத்தான போர்நிறுத்த ஒப்பந்தத்தின் மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த போர் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், காஸாவில் உள்ள மக்கள் குடியிருப்புகள் மற்றும் அகதிகள் முகாம்களைக் குறிவைத்து இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டுவரப்பட்ட பிறகு நடத்தப்பட்ட தாக்குதல்களில் மட்டும் காஸாவில் 1,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், போர்நிறுத்தம் கொண்டு வரப்பட்டதில் இருந்து காஸாவில் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு குழந்தையாவது கொல்லப்பட்டு வருவதாக, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க நாடுகளுக்கான யூனிசெஃப் இயக்குநர் எட்வர்ட் பெய்க்பெடர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், 2025 ஒக்டோபரில் போர்நிறுத்தம் கொண்டுவரப்பட்டதற்குப் பிந்தைய 300 நாள்களில், காஸாவில் குறைந்தது 300 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர். அதன்படி, நாளொன்றுக்கு ஒரு குழந்தை கொல்லப்படுகிறது எனக் கூறியுள்ளார்.