சிவசேனா தலைவருக்கு நடந்த விபரீதம்: ஆற்றில் மிதந்த உடல்

மார்த்தாண்டம் அருகே கண்ணக்கோடு பகுதியில் தாமிரபரணி ஆற்றில் இரட்டை ரயில் பாதை பணிக்காக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பாலத்தின் கீழே தாமிரபரணி ஆற்றில் நேற்று ஒரு ஆண் சடலம் மிதந்து கொண்டிருந்தது. இதை பார்த்தவர்கள் மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் ெதரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் வந்து தீயணைப்பு துறை உதவியுடன் உடலை மீட்டனர். 

இறந்து 3 நாட்களுக்கு ேமல் ஆனதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. உடலில் சிவசேனா கட்சியின் அடையாளம் பச்சை குத்தியிருந்தது. இதையடுத்து குமரி மாவட்ட சிவசேனா நிர்வாகிகளை போலீசார் அழைத்து விசாரித்தனர். 

அவர்கள் சடலமாக கிடந்தவர் களியக்காவிளை அருகே செங்கவிளையை சேர்ந்த சுதீசன் மகன் அதுல் (32) என்றும், கேரள மாநில சிவசேனா தலைவராக இருந்தவர் என்றும் தெரிவித்தனர்.