இன்றைய ராசி பலன்
28 நவம்பர் 2026 சனிக்கிழமை
இன்று புனர்பூசம் நட்சத்திரம் மாலை 6 மணி 44 நிமிடம் வரை பின்பு பூசம் நட்சத்திரம். திதி பிற்பகல் 12 மணி 18 நிமிடம் வரை சதுர்த்தி பின்பு பஞ்சமி. சித்த யோகம் கூடிய நாள்.
மேஷம்
இன்று தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்பு குறையும். வீடு மனை வாகனம் சம்பந்தமாக நல்ல செய்தி கிடைக்கும். நெடுநாளாக தடைபட்ட வேலைகள் முடிவடையும்.
ரிஷபம்
இன்று புதிய உற்சாகத்துடன் நாள் தொடங்கும். நண்பர்கள் மூலம் நன்மை கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பண விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
மிதுனம்
இன்று நினைத்த இடத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு உயரும். தாய் தந்தை ஆரோக்கியத்தில் கவனம் தேவை. யாரையும் நம்பி பண முதலீடு செய்ய வேண்டாம்.
கடகம்
இன்று குடும்பத்தில் இருந்த மந்த நிலை மாறி உற்சாகம் வரும். உங்கள் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும். வரவுக்கு மேல் செலவு இருந்த நிலை மெல்ல மாறும்.
சிம்மம்
இன்று எந்த காரியத்தையும் நிதானமாக செய்ய வேண்டும். தேவையில்லாத இடங்களில் கருத்து கூற வேண்டாம். உடல் நலத்தில் கவனம் தேவை.
கன்னி
இன்று வேலை இடத்தில் உங்கள் கருத்துக்கு மதிப்பு கிடைக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
துலாம்
இன்று மனதில் நினைத்தது நிறைவேறும் நாள். நோய் தொல்லை நீங்கி ஆரோக்கியம் கூடும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
விருச்சிகம்
இன்று பொறுமை மிகவும் தேவை. செலவுகளில் கவனமாக இருக்கவும். அவசர முடிவுகளை தவிர்க்கவும். மாலை நேரத்தில் நல்ல செய்தி கிடைக்கும்.
தனுசு
இன்று உறவுகள் இனிமையாக இருக்கும். தொழிலில் வெற்றி கிடைக்கும். பயணங்களால் நன்மை உண்டு.
மகரம்
இன்று எதிர்ப்புகள் விலகும். வெற்றிகள் குவியும் நாள். பண வரவு சீராக இருக்கும்.
கும்பம்
இன்று புதிய யோசனைகள் தோன்றும். யோசித்து செயல்படவும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு.
மீனம்
இன்று சின்ன சின்ன குழப்பங்கள் மறையும். குடும்பத்தில் நல்ல விஷேசங்கள் நடக்கும் காலம். பாதியில் விட்ட வேலைகளை மீண்டும் தொடங்கலாம்.
