இன்றைய ராசி பலன்
29 நவம்பர் 2026 ஞாயிற்றுக்கிழமை
இன்று பூசம் நட்சத்திரம் மாலை 5 மணி 15 நிமிடம் வரை பின்பு ஆயில்யம் நட்சத்திரம். திதி காலை 10 மணி 4 நிமிடம் வரை பஞ்சமி பின்பு சஷ்டி. சித்த யோகம் கூடிய நாள். இன்று தனுசு ராசிக்கு சந்திராஷ்டமம்.
மேஷம்
இன்று குடும்பத்தினரை அனுசரித்து செல்லவும். தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டு. நீண்ட நாளாக வர வேண்டிய பணம் கைக்கு வரும்.
ரிஷபம்
இன்று தொழிலில் இருந்த மந்த நிலை விலகும். மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். அக்கம் பக்கத்தினரோடு அனுசரித்து செல்லவும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு.
மிதுனம்
இன்று பேச்சில் மிகவும் கவனமாக இருக்கவும். மனதில் புதிய நம்பிக்கை உருவாகும். எதிர்கால முதலீடுகள் சாதகமாக அமையும். வேலை செய்யும் இடத்தில் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கடகம்
இன்று உறவுகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். புதிய சிந்தனை தோன்றும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை அதிகரிப்பீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும்.
சிம்மம்
இன்று வேலையில் மிகுந்த கவனம் தேவை. புதிய நபர்களால் அலைச்சல் உண்டாகலாம். மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பு கொடுக்கவும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உருவாகும்.
கன்னி
இன்று தடைபட்ட வேலைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத உதவிகள் மூலம் மாற்றங்கள் வரும். மனதில் தெளிவு பிறக்கும்.
துலாம்
இன்று புதிய முயற்சிகள் வெற்றி தரும். பண வரவு திருப்தியாக இருக்கும். வேலைப்பளு சற்று அதிகமாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
விருச்சிகம்
இன்று அதிர்ஷ்டம் கூடும் நாள். எடுத்த காரியம் வெற்றி பெறும். உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும். நல்ல நபரை சந்திக்கும் வாய்ப்பு உண்டு.
தனுசு
இன்று சந்திராஷ்டமம் என்பதால் பொறுமை அவசியம். வாக்குவாதங்களை தவிர்க்கவும். முக்கிய முடிவுகளை நாளைக்கு தள்ளி வைக்கவும். மாலை நேரத்தில் மன அமைதி கிடைக்கும்.
மகரம்
இன்று குடும்ப ஒற்றுமை கூடும். ஆரோக்கியம் மேம்படும். பழைய தவறான புரிதல் மாறும். வேலை இடத்தில் மதிப்பு உயரும்.
கும்பம்
இன்று மிகவும் சிறந்த நாள். மனதில் நினைத்தது நிறைவேறும். தனலாபம் கூடும். வெற்றி கிடைக்கும்.
மீனம்
இன்று மற்றவர்கள் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். முயற்சிகளில் இருந்த தாமதம் விலகும்.
