மட்டக்களப்பில் பெரும் சோகம்!

 


மட்டக்களப்பு, கருவப்பங்கேணி பகுதியில் வீடொன்றின் கூரை திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் வீடொன்றின் மேல் மாடியிலுள்ள கூரைப் பகுதியில் திருத்தப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அன்றாட வாழ்வாதாரத்திற்காகப் பணிக்குச் சென்ற இருவர் இவ்வாறு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த இருவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் ஆழ்ந்த துயரில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.