கொழும்பு பிரதான வீதியில் கோர விபத்து! இருவர் உயிரிழப்பு!

 


புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் பத்துலுஓயா பிரதேசத்தில் இன்று (29) காலை ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

காரொன்றும் கன்டெய்னர் வாகனமொன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில், காரில் பயணித்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளைப் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.