போதைப்பொருள் வாள்களுடன் கொத்து கொத்தாக சிக்கும் யாழ் பொடியன்கள்..!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாதகல் பகுதியில்  கஞ்சா மற்றும் வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 600 கிராம் கஞ்சாவும், மூன்று வாளும் ஒரு குறிப்பிட்ட ஆயுதமும் மீட்கப்பட்டது.

சந்தேகநபர்கள் மூவரும் இளவாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். 

விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.