அரச பேரூந்து சாரதியின் அசமந்தம்-இருவர் கவலைக்கிடம்..!

 இரத்தினபுரி - எஹெலியகொடை, மின்னான சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து  (23) நண்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இ.போ.ச பேருந்து சாரதியால் வந்த வினை ; பல வாகனங்கள் சேதம் | Fatal Accident Caused By Bus Driver

கவனக்குறைவாக பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று முன்னால் பயணித்த முச்சக்கரவண்டியுடன் மோதி பின்னர் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.