எனது அப்பா எமது ஈழ மண்ணை நம்பி விவசாயம் செய்தே என்னை படிக்க வைத்தார் - வவுனியாவில் வணிகப் பிரிவில் முதலிடம் பெற்ற மாணவி.

 

எனது அப்பா எமது ஈழ மண்ணை நம்பி விவசாயம் செய்தே என்னை படிக்க வைத்தார் நான் எனது இலக்கை அடைவேன் என வெளியாகிய உயர்தரப் பெறுபேற்றில் வணிகத்துறையில் வவுனியா மாவட்டத்தில் முதலிடம் பெற்ற நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியாலய மாணவி பிதுர்சா சற்குணம் தெரிவித்துள்ளார்.

3A சித்திகளைப் பெற்று முதலிடம் பெற்ற அந்த மாணவி மேலும் தெரிவிக்கையில்.

நான் நெளுக்குளம் கலைமகள் வித்தியாலயத்தில் கல்வி கற்கின்றேன். தற்போது வெளியாகிய உயர்தரப் பரீட்சைக் பெறுபேற்றில் வவுனியா மாவட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளேன். 

நான் இப்படி வருவதற்கு துணையாக இருந்த பாடசாலை நிர்வாகத்திற்கு நன்றி. அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர்களுக்கும் நன்றி. நான் ஆரம்ப கல்வியில் இருந்து உயர்தரம் வரை இங்கு தான் கல்வி கற்றேன். எனக்கு அந்த வகையில் உதவிய அனைத்து ஆசிரியர்களுக்கும் நன்றிகள்.

எனது அப்பா விவசாயம் செய்துதான் என்னை படிக்க வைத்தார் எனக்கு படிக்க  எந்த ஒரு தடையையும் அவர்கள் ஏற்படுத்தவில்லை அவருக்கும் நன்றி தெரிவிகின்றேன் அம்மாக்கும் நன்றிகள் நான் பல்கலைக்கழகம் சென்று கணக்காளராக வேண்டும் என்பதே எனது அவா அதை அடைவேன் எனத் தெரிவித்தார்.