வினை அறுக்கும் வியாழனில் உங்கள் ராசிபலன் எப்படி..!{22.5.2025}

 

வியாழக்கிழமை, 22 மே 2025
மேஷம்
aries-mesham
பெண்களின் நட்பால் புதிய சுகம் ஏற்படும். அக்கறையுடன் படித்து மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெறுவர். தொழில், தொல்லைகள் குறைந்து, வியாபாரத்தில் எல்லைகள் விரியும்.
ரிஷபம்
taurus-rishibum
புதிய உத்தியோக வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். அனைத்துப் பணிகளும் அனுகூலமான திசைகளிலும் நகரும். அரசு அதிகாரிகள் மூலம் எதிர்பார்த்த காரியங்களில் வெற்றி மேல் வெற்றி வரும்.
மிதுனம்
gemini-mithunum
வாழ்க்கையில் புதிய மாற்றங்களால் முன்னேற்றம் ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். இனிய உல்லாசப் பயணங்கள் ஏற்படும். சுகம் சந்தோஷம் கூடும்.
கன்னி
virgo-kanni
வெற்றியைத் தவிர வேறொன்றுமில்லை. நண்பர்களின் உதவி நலம் பயக்கும். வீடு, மனை வாங்கும் எண்ணங்கள் மனதில் எழுந்தாலும், எதிர்பார்த்த கடன்கள் வரத் தாமதமாகும்.
மகரம்
capricorn-magaram
மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. எதிர்பார்த்த அளவுக்கு வரவினங்கள் இருக்காது. புதிய தொழில் முதலீடுகளை ஒத்திப் போடுவது நல்லது. வார்த்தைகளை அளந்து பேசுக.
கடகம்
cancer-kadagam
விளையாட்டாக இருக்காமல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். பிறர் துன்பத்தில் மகிழ்ச்சி காணாதீர்கள். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடந்தால் உயர்வு உண்டு.
சிம்மம்
leo-simmam
சாதுர்யமான பேச்சால் சகலமானவர்களையும் சமாளித்துவிடுவீர்கள். வளமான வாழ்வும், வாகன யோகமும் உண்டு. வியாபாரத்தில் கவனத்துடன் செயல்பட்டால் இழப்பைத் தவிர்க்கலாம்.
துலாம்
libra-thulam
ஆரோக்கியத்தை பொருத்து குழந்தைகளை நல்ல அக்கறையுடன் கவனிப்பது முக்கியம். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. அமைதியும், ஆதரவான பேச்சு எதிர்ப்புக்களை குறைக்கும்.
மீனம்
pisces-meenam
அன்றாட வாழ்க்கையில் எதிர்பார்த்த மாற்றங்கள் வந்து ஏற்றம் தரும். குழப்பவாதி மனைவியால் உறவுகளிடையே மனக்கசப்பு ஏற்படும். வாடிக்கையாளர் மனம் அறிந்து நடந்தால் இலாபம் அதிகரிக்கும்.
தனுசு
sagittarius-thanusu
மகிழ்ச்சியான மனநிலை தேகத்தில் தெம்பு தரும். மனைவியின் ஒத்துழைப்பால் மனம் குளிரும். குழந்தைகள் பால் பாசம் பொழிவார்கள். தொழில் வளர்ச்சியில் திருப்தி நிலவும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
வேலை அதிகமாக வேண்டாத அலைச்சல்கள் ஓய்வு குறையும். அம்மாவின் ஆரோக்கியத்தை அக்கறையுடன் பேண வேண்டிய நாள். தொழிலில் புதிய முயற்சிகள் கை விடுவது நல்லது.
கும்பம்
aquarius-kumbam
ஆசைகள் நிறைவேறி அனைத்து விஷயங்களிலும் மனத்திருப்தி ஏற்படும். புத்தி சாதுர்யமும், வாக்கு வன்மையும் ஓங்கி வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இனிய பயணங்களால் இன்பம் பெருகும்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post