வெற்றி தரும் வெள்ளியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{23.5.2025}

 

வெள்ளிக்கிழமை, 23 மே 2025
மேஷம்
aries-mesham
வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். வாகனங்களில் செல்கையில் வேகத்தை குறைத்து, விபத்தினைத் தவிர்க்கவும். உறவுகளிடையே நல்லுறவு ஏற்படுத்த முயலவும்.
ரிஷபம்
taurus-rishibum
படிப்பில் வெற்றிகள் படிப்படியாய் வரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து மகிழ்வர். பலவழிகளிலும் பணவரவு அதிகரிக்கும். பெண்களால் இலாபம் ஏற்பட மனம் மகிழும்.
மிதுனம்
gemini-mithunum
செய்தொழிலில் புதிய உத்வேகம் பிறக்கும். அரசு பணியில் உள்ளவர்கள் பணியில் பணிவும், துணிவும் இருந்தால் முன்னேற்றம் ஏற்படும். பெண்களால் இலாபமும், போகமும் உண்டு.
கன்னி
virgo-kanni
புதிய தொழில் பயிற்சி மற்றும் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். வாக்கு வன்மையால் சம்பாத்தியம் உயரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு ஏற்படும் தன வரவு மூலம் சந்தோஷம் நிலவும்.
மகரம்
capricorn-magaram
பணவரவுகள் அதிகரிப்பால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். குழந்தைகள் பால் அன்பும், அவர்களின் முன்னேற்றத்தில் ஆர்வம் ஏற்படும். மனைவியின் உதவிகள் மகிழ்ச்சி அளிக்கும்.
கடகம்
cancer-kadagam
தெய்வ நம்பிக்கையும், பாக்கிய விருத்தியும் ஏற்படும். கோவில் திருப்பணிகள் செய்வதில் விருப்பம் அதிகரிக்கும். வாழ்க்கையின் வசந்த காலம் ன்று நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
சிம்மம்
leo-simmam
அரசு அதிகாரிகளிடம் பணிவோடு நடந்தால் முன்னேற்றம் ஏற்படும். மனைவியின் கலகத்தால் வீட்டில் குழப்பங்கள் ஏற்படலாம். இழப்பை தவிர்க்க உங்கள் பொருட்களை கவனமாக பாதுகாக்கவும்.
துலாம்
libra-thulam
எதிர்பார்த்த தனவரவுகள் வந்து ஏற்றம் தரும். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகி, தக்க தருணத்தில் நல்ல நண்பர்கள் கடன் உதவி கிடைக்கும்.
மீனம்
pisces-meenam
பொருளாதார நிலை போற்றும் படியாக இருக்கும். வசீகரமான பேச்சால் வருமானம் கூடும். வருமான உயர்வால் வளமும் அதிகரிக்கும். விரும்பிய வாகனத்தில் வெளியூர் செல்வீர்கள்.
தனுசு
sagittarius-thanusu
வீட்டில் திருட்டை தவிர்க்க விழிப்புடன் இருத்தல் அவசியம். தாயின் உடல்நிலையில் அக்கறை தேவை. காரியத்தடைகள் மற்றும் பண இழப்புகள் ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
உங்கள் திறமை முழுக்க காட்டிப் பணிபுரிந்தாலும் உயர் அதிகாரிகள் குறையே சொல்வர். விபத்துக்களை தவிர்க்க, வேகம் குறைத்து வாகனங்களில் நிதானமாகச் செல்லவும்.
கும்பம்
aquarius-kumbam
குடும்பத்தாரிடம் வீண் வாக்குவாதத்தில் ஈடுபடாது அனுசரித்துச் செல்வது அமைதி அளிக்கும். தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள். தீவிரமாக முயன்றால் வெற்றி நிச்சயம்.

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post